மா.சே.துங்.


மாக்சினதும், சீனத் தேசியவாதத்தினதும் கலப்பேமாவோயிசமாகும்.

                D. JEGATHEESWARAN
                B.A(HONS), M.A(PERA), PGDE, DIP.IN.HR,
                SPECIAL IN POLITICAL SCIENCE

01. மா.சே.துங். அறிமுகம்

 இக்கால ஆசிய வல்லரசு நாடாகிய சீன மக்கள் குடியரசைப் பொதுவுடமைக் கொள்கையடிப்படையில் நிறுவிய அரசியல் தலைவர் மாவோ.சே.துங் ஆவார். நவசீனத்தின் சிற்பியான மா.சே.துங் 1893ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி சீனாவின் ஹீனான் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தார். தந்தை ஒரு விவசாயி.

     படிப்பை முடித்ததும் பள்ளிகூட ஆசிரியராக சில காலம் பணியாற்றினார். பின்னர் பீகிங் பல்கலைக்கழக நூல் நிலைய குமாத்தாவாகச் சேர்ந்தார். அப்போதுதான் கம்யூனிஸக் கொள்கையில் ஈடுபாடு கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து அதன் உயர் அதிகார குழுவில் (பொலிட் பீரோ) உறுப்பினர் ஆனார்.

     சீனாவில் மன்னராட்சியை எதிர்த்து சன்யெட் சென் புரட்சி நடத்தியபோது மா.சே.துங் 18 வயது இழைஞர். புரட்சியின் மகத்துவத்தை நேரில் கண்ட அவர் புரட்சிக்காரராக மாறினார்.

     1931ஆம் ஆண்டில் சியாக்கி மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புரட்சிப் படை திரட்டினார். இதை அறிந்த சியாங்-கே-ஸேக், புரட்சிப் படையை ஒடுக்க இராணுவத்தை ஏவிவிட்டார். இதை அறிந்து கொண்ட மா.சே.துங் தன் புரட்சி படையினருடன் நிண்ட நடைப்பயணத்தை மேற்கொண்டார். அவர் பயணம் செய்த தூரம் 8 ஆயிரம் மைல் தூரம். இந்த மகத்தான சாதனையைச் செய்ததால், கமடயூனிஸ்ட் கட்சியினரின் உள்ளத்தில் இடம் பிடித்தார். 1934இல் சீனக் கம்யூனிசக் கட்சியின் தலைவரானார்.

     இரண்டாவது உலகப்போர் மூண்டபோது, சீனாவை ஜப்பான் தாக்கியது. ஜப்பானிடம் இருந்து சீனாவை காப்பாற்றுவதே உடனடியாகச் செய்ய வேண்டிய காரியம் என்பதை உணர்ந்து உள் நாட்டில் தன் அரசியல் எதிரியாக இருந்த சியாங்.கே.ஷேக்குடன் சமரசம் செய்து கொண்டு ஜப்பானை எதிர்த்துப் போராடினார். போரில் ஜப்பான் தோர்த்தது. சிலாங்.கே.ஷேக் ஆட்சிக்கு எதிராக விவசாயிகளின் ஒத்துழைப்புடன் 'கொரில்லாப்போர்' நடத்தினார். அதனால் சிலா.கே.ஷேக் சீனாவை விட்டு ஓட்டம் பிடித்தார். பார்மோசா (இன்றைய தைவான்) தீவில் போய் உட்கார்ந்து கொண்டு ஒரு பொம்மை ஆட்சி நடத்தினார். ஆனால் சியாங்.கே.ஷேக் வீழ்ச்சிக்குப் பிறகு சீனா 1949 அக்டோபர் 1ம் திகதி குடியரசு நாடாகியது. மக்கள் சீனக் குடியரசின் முதல் அதிகராக மா.சே.துங் பதவி ஏற்றார்.

     அதிபரானதும் சீனாவை மன்னேற்றிச் செல்ல பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார். பிரிட்டனை போல சீனாவை வளம் கொழிக்கும் நாடாக உருவாக்க வேண்டும், அதுவும் குருகிய காலத்தில் இதை செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதிக ஆர்வத்தினால் அவர் மேற்கொண்ட திட்டங்கள் தோல்வி அடைந்தன. 1961க்கும், 1963க்கும் அடையே சினாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு 4 கோடிப்பேர் மாண்டனர்.

     'சீன மக்கள் அதிகம் படிக்காதவர்கள். அவர்கள் கல்வி கற்று அனுபவங்கள் பெற்ற பிறகே தீவிரமான திட்டங்களை அமுல்படுத்தியிரக்க வேண்டும். அர்வ மிகுதியால் நான் அவசரப்பட்டு விட்டேன்' என்று தனது தவறை மா.சே.துங் ஒப்புக் கொண்டார்.

     1970க்குப் பிறகு மா.சே.துங் உடல் நிலை பாதிக்கப்பட்டது. எனவே, அரசு பணிகளில் தீவிரமாக ஈடுபடாமல் ஆலோசனைகள் மட்டும் கூறிவந்தார். 1976 செப்டெம்பர் 9ஆம் தேதி காலமானார். மாவோ.சே.துங்கின் கருத்துக்கள் மாவோயிசம் என்று கூறப்படுகின்றது.

     சீனப் பெருந்தவைலவரான மாஓசே துங்கின் சிந்தனைகபனைத் தோகுத்துக்கூறும் போது அவர் மாக்ஸிய தத்துவத்திற்கு எத்தகைனய பங்களயிப்பினைச் செய்துள்ளார் என்பதையும் ஒரு மாச்சிச – லெனினிச புரட்சிகரவாதி என்ற அளவில் எத்தகைய பங்களிப்பினை ஆற்றியுள்ளார் என்பதையும் நோக்குதல் அவசியமாகும்.

02. மா.சே.துங்கின் சிந்தனைகள்

 சீனப் பெருந்தலைவரான மா.சே.துங்கின் சிந்தனைகளை விரிவாக நோக்கும் போது இவருடைய கருத்துக்கள் சீனத் தேசிய வாதத்தினதும், மாக்சிஸத்தினதும் கருத்தாக அமைகின்றனவா என்பதனை அறிந்து கொள்ள முடியும். அவ்வகையிவல் மாவேலாசிம் எத்தகைய கருத்துக்களை முக்கியமாக வெளிப்படுத்தி நிற்கின்றன என்ற ஆய்வில் நடைமுறை பற்றிய கருத்துக்கள் மற்றும் முரண்பாடு, அரசு, புரட்சி, யுத்தம், தத்துவம், சீனப்புரட்சி, புதிய ஜனநாயகம் போன்ற கருத்துக்களைப் பற்றியும் ஆராயவேண்டியுள்ளது.  அவ்வகையில் மேற்படி கருத்துக்கள் ஓர் ஒப்பிட்டு ரீதியாக ஆராய்வதின் ஊடாக சீனத் தேசியவாத்த்தினதும், மாக்சிஸத்தினதும் கலப்பாகவா மாவோயிசம் காண்படுகின்றது, அல்லது அவற்றில் இருந்து விடுபட்ட வகையிலா காணப்படுகின்றது என்பதனை அறிந்து கொள்ளத்தக்க வகையில் விளங்கங்களை இங்கு நோக்குவோம்.

03. நடைமுறை பற்றி மா.சே.துங்

     மாக்சிச தத்துவவியலாளரான மா.சே.துங்  இனுடைய இரண்டு குறிப்பிடத்தக்க ஆக்கங்களான நடைமுறை பற்றி, முரண்பாடுகள் பற்றி என்பன அவருக்கு ஒரு குறிப்பிடத்தக்க மாக்சிச தத்துவவியலாளரும், புத்தி ஜீவியும் என்ற அந்தஸ்தைக் கொடுத்தன. இவ்விரு ஆக்கங்களைக் கொண்டே அவரை உலக கொம்யூனிச இயக்கத்தின் முன்னனிக் கோட்பாட்டாளர்களுள் ஒருவராகக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. 1937ஆம் ஆண்டு இவ்விரு நூல்களும் அவரால் எழுதப்பட்டன எனக் கொள்ளப்படுகின்ற போதிலும் தற்போதய மாதிரியில் அவை 1950ஆம், 1952ஆம் ஆண்டுகளிலேயே பிரசுரிக்கப்பட்டன. சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியில் காணப்பட்ட கருத்து முதல் வாதிகளின் பிடிவாதமான தவறுகளை விசேடமாக அறிவு பற்றிய மாக்சிய கோட்பாட்டின் தவறுகள் பற்றிய தனது கருத்துக்களை தருவதற்காகவே மா.சே.துங் 'நடை முறை பற்றி' என்ற நூலை எழுதினார்.

பெனாலில் இருந்து யப்பானியர்களுக்கு எதிரான இராணுவ அரசியல் கல்லூரியில் மா.சே.துங் நிகழ்த்திய ஒரு விரிவுரையில் காணப்பட்ட சிந்தனைகளே இக கட்டுரை உள்ளடக்கியிருந்தது. இக் கட்டுரையில் இவர் பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார்.

'மனிதனின் சமூக இயல்பு, அவனுடைய வரலாற்று அபிவிருத்தி என்பவற்றுக்கு அப்பால் நின்றே மாக்சிக்கு முன்னைய லோகாதயம் அறிவு பற்றிய பிரச்சினைகளை பரிசீலனை செய்து அதனால் சமூக நடைமுறை மீது அறிவு தங்கியுள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடியாதிருந்தது. அதாவது உற்பத்தியிலும், வர்க்கப் போராட்டத்திலுமே அறிவு தங்கியிருக்கின்றது என்பதை உணராது இருந்தது. ஆனால் மாக்சும், மாக்சீய வாதிகளும் மனிதனுடைய நடவடிக்கைகளுள் மிகவும் அடிப்படையான நடவடிக்கை உற்பத்தி நடவடிக்கையே என்றும் இதுவே மனிதனுடைய மற்றைய நடவடிக்கைகளையும் தீர்மானிக்கின்றது எனவும் கொண்டனர்.

உலோகாயத உற்பத்தியின் நடவடிக்கைகளிலேயே மனிதனின் அறிவு முக்கியமாகத் தங்கியிருக்கின்றது. அதனூடாக மெல்ல மெல்ல இயற்கையின் பெருமானங்கள், இயற்கைச் சட்டங்கள், தனக்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்புகள் என்பவற்றை விளங்கிக் கொள்கிறான். உற்பத்தி நடவடிக்கைகளினூடாக மனிதன் சிறிது சிறிதாகப் பல்வேறு அளவுகளிலும் மனிதனுக்கும், மனிதறுக்குமிடையிலான தொடர்புகளை அறிகிறான். இத்தகைய அறிவினை உற்பத்தி நடவடிக்கைகளினாலன்றி மற்றவற்றின் மூலம் அறிய முடியாது.

மேலும், மனிதன் ஒரு சமூகத்தின் சகல விதமான துறைகளிலும் பங்கு பற்றுகிறான் என வாதிட்டார். நடைமுறை என்பது அறிவினையும் விட உயர்ந்தது. ஏனெனில் அது சர்வ உலகு வாய்ந்தது என்ற அந்தஸ்தைக் கொண்டிருப்பதோடு உடன் நிகழ்கால யதார்த்தமானது என லெனின் சொன்னார் என்று மா,சே.துங் குறிப்பிட்டார். முரணறுவாத லோகாதாயம் பற்றிய மாக்சிய தத்துவம் இரு பிரதியட்சமான இயல்புகளைக் கொண்டுள்ளன. ஒன்று வர்க்க இயல்பு. இது கோட்பாடு, நடைமுறையில் தங்கியுள்ளதோடு அது நடைமுறைக்குச் சேவையாற்றுகின்றது. உண்மைக்கான அளவீடு தனியே சமூக நடைமுறையே அறிவு பற்றிய முரணறுவாத லோகாதாயம் அடிப்படை மூல நிலைப்பாடு நடைமுறை பற்றிய நிலைப்பாடேயாகும் என்றும் வாதிட்டார்.

மாக்ஸிக்கு மன்பு அறிவைப்பற்றிய விடயங்கள் அனைத்தும் மனிதனின் சமூகத்தன்மை அவனது வரலாற்று வளர்ச்சி என்பவற்றுடன் தொடர்புபடுத்தப்படாது தனியானதொன்றாக ஆராயப்பட்டது. மாக்ஸ் அறஜவு என்பது மனித நடத்தையின் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது என்றார். உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவனது அறிவும் தீர்மானிக்கப்படுகின்றது. வர்க்கம் அற்ற சமுதாயத்தில் சகலரும் தமது தேவைக்காக இயக்கத்தில் ஈடுபடுகின்றனர். இதுவே மனித வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றது. வர்க்கங்கள் வௌ;வேறு வகையில் சிந்திக்கத் தலைப்படகின்றபோது அதற்கு ஏற்ப அறிவு வளர்ச்சியடைகின்றது. ஒரு மனிதன் வெற்றி பெற வேண்டுமாயின் அவன் தனது சிந்தனைகளை வெளிக்காரணிகளுடன் தொடர்பு படுத்த Nவுண்டும். மனித அறிவினை இயக்கப்பாட்டில் இருந்து பிறித்தறிய முடியாது. லெனின் அறிவை விடப் பெரியது நடைமுறையே என்றார். மாக்ஸிய இயக்கவியல் பொருள் முதல் வாதம் இரு தன்மைகளைக் கொண்டது.

1.   வர்க்கப் போராட்டம்

2.   நடைமுறைப்படுத்தல்

சமூக நடைமுறையின் மூலமே வெற்றி தங்கியுள்ளது. மாக்ஸ், லெனின் ஆகியோர் கூறிய கருத்துக்களை மாவோவும் ஏற்றுக் கொள்கின்றார். மாவோ கோட்பாடும் நடைமுறையும் ஒரே இடத்தை வகின்கின்றது எனக் கூறுகின்றார். மாக்ஸிய லெனினிச கோட்பாடுகள் சூழ்நிலைக்கு ஏற்ப மாவோவின் கோட்பாடுகளை அபிவிருத்தி செய்யத்தக்க கருவியாக அமைந்தன. மாக்ஸீம் ஏங்கல்சும் தமது கோட்பாடுகளை வளர்ச்சியடைந்த நாடுகளை வைத்தே கூறினர். மாவோ அவற்றை தமது நாட்டுக்கு ஏற்ப ஒழுங்கமைத்து நடைமுறைப்படுத்தினார். சீனா அரைமானிய அரைக்குடியேற்ற நாடானதால் அந்நிலைமையை மாற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டது. மாவோ சீனச் சமுதாயத்தை ஆராய்ந்து அதற்கு ஏற்ப கோட்பாடுகளை அமைத்து நடைமுறைப்படுத்தினார்.

  

04. முரண்பாடு பற்றி மா.சே.துங்

   

மாக்ஸ், ஏங்கல்ஸ் இருவரும் முரண்பாடுகளை ஆராய்ந்து விளக்கினர். இவர்கள் அபிவிருத்தி என்பது முரண்பாடுகளின் அடிப்படையிலேயே ஏற்படும் என்றனர். இதே கருத்தை மாவோவும் ஏற்றார். ஆனால் அதனை சரியான முறையில் சீனாவிற்கு ஏற்ப பிரயோகித்தார்.

     உலகிலுள்ள சகல பொருட்களிலும் முரண்பாடுகள் உண்டு. முரண்பாடு இல்லாத எதுவுமே இல்லை. பொருட்களின் உள்ளேயும், வெளியேயும் முரண்பாடுகள் உண்டு. ஒரு பொருளின் அபிவிருத்திக்கு அதனுள் இருக்கும் முரண்பாடே காரணமாக அமைகின்றது. உள்முரண்பாடுகளே வெளிமுரண்பாடுகளை விட கூடிய பங்கினை வகிக்கின்றன. ஆரம்பம் முதல் இறுதிவரை முரண்பாடு நிலவிவருகின்றது. இம் முரண்பாடுகளின் தொடர்பு காரணமாகவே சகலதும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

     மாவோ அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப முரண்பாடுகளை கண்டுபிடித்து செயற்பட வேண்டும் என்றார். முரண்பாடு சில வேளை நேரடியாகத் தென்படும். சிலவேளை தென்படாமலும் இருக்கலாம். ஆனால் மாற்றங்களுக்கு முரண்பாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சீன சமுதாயத்தில் ஜனநாயக புரட்சியின் பின் மாற்றங்கள் ஏற்பட்டாலும் முரண்பாடுகள் இல்லாமலில்லை. சீன மக்கள் நாட்டின் அபிவிருத்திக்காக ஒன்றுபட்டிருக்கலாம். ஆனால் இதனைக் கண்டு சீன சமுதாயத்தில் முரண்பாடு இல்லை என்று கூறமுடியாது. சீன சமுதாயத்தில் இரண்டு முரண்பாடுகள் காணப்படுகின்றன.

    எமக்கிடையிலான முரண்பாடு
    எமக்கும் எதிரிக்கும் இடையிலான முரண்பாடு

இவை இரண்டும் தன்மையில் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகும்.

     ஒவ்வொரு முரண்பாடும் அதனது ஒவ்வொரு அம்சங்களும் அவற்றுக்குரிய முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. இதுவே முரண்பாட்டின் குறிப்பிடத்தக்கதும், தொடர்பானதுமான இயல்புகளாகும். குறிப்பிடத்தக்கதும், தொடர்பானதுமான இயல்புகளாகும். குறிக்கப்பட்ட சூழ்நிலைகளில் எதிர் எதிரானவை அடையாளங்களைக் கொண்டிருப்பதோடு அதன் விளைவாக கரு உட்பொருளில் ஒன்று சேர்ந்து இயங்கக்கூடியவை. ஆனால் எதிர் எதிரானவற்றின் போராட்டம் முடிவற்றது. இது எதிர் எதிரானவை. ஒன்று சேர்ந்து இயங்கும் போதும் அவை மாற்றமடையும் போதும் தொடர்ந்து இடம்பெறுகிறது. அவை வேறொன்றாக மாற்றமடையும் போது விசேடமாகத் தெளிவாகக் தெரியும். முரண்பாட்டின் குறிப்பிட்ட தன்மை, தொடர்பான தன்மை என்பவற்றைப் படிக்கும்போது பிரதான முரண்பாடு, பிரதானமற்ற முரண்பாடு என்பவற்றுக்கிடையிலான வேறுபாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். முரண்பாட்டின் சர்வ உலகத் தன்மை பற்றிப் படிக்கும் போதும் முரண்பாட்டின் எதிர் எதிரானவற்றின் போராட்டம் பற்றிப் படிக்கும் போதும் போராட்டத்தின் வேறுபாடுகள் மீது கவனம் கொள்ள வேண்டும் என்றும் மா.சே.துங் குறிப்பிட்டார்.

05. யுத்தம் பற்றிய மாவோவின் கருத்துக்கள்

     மாவோ யுத்தம் செய்து எதிரிகளையும் காட்டிக் கொடப்பவர்களையும் வெறிற கொள்ள வேண்டும் என்றார். அதற்காக யுத்த உபாயம் என பல நூல்களையும்ட எழுதியுள்ளார். மாக்ஸ், லெனின் போன்றவர்கள் குறிப்பிடாத யுத்தம் பற்றிய கருத்துக்களை மாவோ கூறினார். ஏகாதிபத்திய வாதிகளின் பலம் அதிகமாக இருக்கும் போது அதற்கு எற்ப உபாயங்களை கையாள வேண்டும். எனNவுதான் ஆயுதம் தாங்கிய யுத்தம் செய்ய வேண்டும் என்றார். முரண்பாடுகள் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு வளயர்ச்சியடைந்து விட்டால் இதனைத் தீர்க்க சிறந்த கருவி யுத்தமேயாகும். வர்க்கங்களுக்கிடையிலும் முரண்பாடு நிலை பெற்றிருக்கும்போது யுத்தம் அவசியமாகும். அதனைக் கடைப்பிடிஎக்கும் முறைகள் கைக்கொள்ளப்பட வேண்டுமென மாவோ கூறுகின்றார். யுத்தம் ஒன்று ஏற்படக் காரணம் யுத்தத்தைத் தடுப்பதற்கேயாகும். வர்க்கங்களுக்கிடையிலான எதிர் யுத்தங்களையும் தேசிய எதிரிகளையும் ஒழிக்க யுத்தமொன்றும் அவசியமாகின்றது என்றார்.

     யுத்தம் என்பது நீதியான யுத்தம், நீதியற்ற யுத்தம் என இரு வகைப்படும். நீதியற்ற யுத்தம் இல்லாம்ல் போக நீதியான யுத்தம் அவசியமாகின்றது. மனித விடுதலைக்கு அவசியமான யுத்தங்கள் அனைத்தும் நீதியானதாகும். எதிர் நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்தப்படும் யுத்தங்கள் அனைத்தும் நீதியானதாகும். எதிர் நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்தப்படும் யுத்தமே கடைசியாகும். சீனாவின் விடுதலைக்கே சீன யுத்தம் நடத்தப்படும். எம்மை எதிர்நோக்கியிருப்பது பயங்கரமான யுத்தமாகும். எனவே நாமும் பயங்கரமாக போராடுவோம். இதுவே கடைசி யுத்தமாகும். இந்த யுத்தத்தை கிராமத்திலிருந்து ஆரம்பித்து நகரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். நகரில் எதிரிகள் தமது பலத்துடன் ஆயத்தமாக உள்ளனர். எனவே நாம் திட்டமிமட்ட வகையில் யுத்தம் செய்ய வேண்டும். தேசிய கம்டயுஸ்ரீனிச கட்சியே யுத்தத்திற்கு தலைமைதாங்க வேண்டும்.  

06. மாவோவின் அரசு பற்றிய கருத்துக்கள்

 மாவோ அரசு பற்றிய கொட்பாடுகளில் மாக்சிஸ கருத்துக்களில் இருந்து மாறுபடகின்றார். புரட்சியை அடுத்து பாட்டாளிகள் சர்வாதிகார அரசே நிலவ வேண்டும் என்ற மாக்சிஸ கருத்தை நிராகரித்து சீனாவில் தொழிலாளர்களையும் சிறிய பூர்சுவாக்களையும், தேசிய பூர்சுவாக்களையும் கொண்ட கூட்டுச் சர்வாதிகாரம் என அழைக்கப்பட வேண்டும் என்றார். இதுவே 'Pநழிடந னுநஅழஉசயவiஉ னுசைநஉவழசளாip' எனப்படுகின்றது.

நாட்டின் பொருளாதாபரத்திற்கு பூர்சுவாக்களின் மக்கியத்துவத்திi மாவோ வலியுறுத்தினளார். இதனால் புரட்சியின் பின்னர் பூர்சுவாக்கள் ஒழிக்கப்டவேண்டும் என்ற மாக்ஸிச கருத்தை நிராகரித்துஅ அவர்களை தொடர்ந்தும் ஒரு வர்க்கமாக இயங்கவோ அனுமதிக்கின்றார். மேலும் கல்வசி முறையின் ஊடாக பூர்சுவாக்களில் மனப்போக்கினை மாற்ற முடியும் என்றார்.

     இன்று 3ஆம் உலக நாடுகளின் ஏகாதிபத்திய எதிரான புரட்சி சக்திகள் மாவோவின் அரசு பற்றிய கோட்பாட்டின் அம்நமான மக்கள் கம்யூனிசம் (Pநழிடநள ஊழஅஅரnளைஅ) அமைகின்றன. இந்த கம்யூனிசங்களில் மக்களை ஒழுங்கமைப்பதன் வாயிலாக தமது நலன்களைப் பேணும் தீர்மானங்களை தாமே மேற்கொள்வதற்கும் அவை உதவும் என்றும் அதன் மூலம் அரசின் முக்கியத்துவத்தினை படிப்படியாக குறைக்க முடியும் என்றும் நம்பினார். சோசஸிச சமூகம் கம்யுஸ்ரீனிசத்தை நோக்கி முன்னேறுவதற்கம் மக்கள் கம்யூனிசங்களை ஒழுங்கமைப்பது அவசியம் எனக் கருதினார்.

07. தத்துவம் பற்றி மா.சே.துங்

   

மாஓவின் 'தத்துவம் பற்றி' என்ற கட்டுரை முதலில் யெனானிலுள்ள ஜப்;பானிய எதிர்ப்பு இராணுவ அரசியல் கல்லூரியில் தொடர் விரிவுரைகளாக அற்றப்பட்டவை பின்னர் தெரிவு செய்யப்பட்ட அவரது எழுத்துக்களில் சேர்ப்பதற்காக நிறுத்தப்பட்டது.

     பொருட்களிலுள்ள முரண்பாட்டு விதி, எதிர் எதிரானவற்றின் ஒற்றுமை இயற்கையினதும் சமூகத்தினதும் அடிப்படை விதியாகும். மனித அறிவு பற்றிய வரலாற்றில் இது ஒரு பெரும் புருட்சியினைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. முரணறுவாத லோகாயத்தின் அடிப்படையில் எல்லா

08. சீனப் புரட்சி பற்றி மாஓவின் கோட்பாடு

     மாவோ சேத்துங் ஜனநாயக கருத்தின் மூலம் சீனா தனது சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வாறு புரட்சியை மேற்கொள்ள வேண்டும். அப்புரட்சி எவ்வகையாக அமைய வேண்டும் என்று விளக்கினார். மாக்ஸ் கூறியது போன்று மனித வாழ்வை மனித அறிவுணர்வு அன்றி சமூக வாழ்க்கiயை நிர்ணயிக்கின்றது என்ற அடிப்படையில் சீன மக்களின் வாழ்வ எவ்வாறு அமைந்துள்ளத என அறிந்து அதற்கு ஏற்ப எவ்வாறு புரட்சி செவய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். சீனாவில் 1940 இன் பின்னரே முதலாளித்துவம் வளரத் தொடங்குகின்றது. ஆனால் சீனா முழுமையான முதலாளித்துவ நாடாகவோ முழுமையான குடியேற்ற நாடாகவோ அகாமல் அரைகுறை குடியேற்ற அiகுறை முதலாளி;துவ சமுதாயத்தைக் கொண்டதாக மாறியது. இதற்கு ஏற்ப அதன் அரசியல் ,பொருளாதார, கலாசார நிலைகளும் மாற்றமடைந்தன. எனவே மாவோ இந்நிரைலயை மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார். அதற்கு ஏற்ப புரட்சியை ஏற்படுத்த வேண்டும். அரசியல், பொருளாதாரம், கலாசாரம் ஆகியவை புதியதாக மாற்றப்பட வேண்டுமென்று கூறினார். இக்கரு;தினை எவ்வாறு மேற்கொள்ளாம் என்பதனையே புதிய ஜனநாயகத்தில் குறிப்பிட்டார்.

     சீன்ப புரட்சி இரு கட்டங்களாக நடைபெற வேண்டுமு;.

    ஜனநாயக புரட்சி
    சோஷலிச புரட்சி

 சினச் சமுதாய நிலைமையானது அரைகுபுறை குடியேற்றவாத அரை மானிய அமைப்பாகும். இந்நிலைமையை மாற்ற வேண்டும். இதற்குப் புதிய ஜனநாயகம் அமைக்கப்டவேண்டும். அந்த ஜனநாயகத்தை மேலும் அபிவிருத்தி செய்து சொசலிஸ ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும். சோசலிஸப் புரட்சியை நோக்கி நாம் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

     எதிர்காலத்தில் சீன ஜனநாயகப் புரட்சியை கொண்டு செல்வோர் சிட்சயமாக விவசாய வர்க்கத்தினராகவே இரப்பர். சீனா அரைகுறை முதலாளித்துவ நாடாக இருப்பதால் அங்குள்ள முதலாளித்துவ வாதிகள் புரட்சி மனப்பான்மை உடையவர்களாக இருப்பர். இதற்கு காரணம் ஏகாதிபத்திய பிரபுத்துவ அடக்குமுறைக்கு அவர்கள் உட்பட்டிருப்பதாகும். சீன தொழிலாளர் வர்க்கம் அவர்களை ஒன்றுதிரட்டி ஐக்கிய மன்னணி ஒன்றை அமைக்க வேண்டும்.

     1917 இல் நடைபெற்ற ரஸயப்புரட்சியும், அங்கு அமைக்கப்பட்ட சோஸலிச அரசும் இனிமேல் நடைபெறும் புரட்சியை முதலாளித்துவ புரட்சியாக இருக்காமல் செய்ய உதவும் என்றார். அதனால் இவர்களின் உதவியாலும், நடவடிக்கைகளின் முலமுமே ஜனநாயகப் புரட்சியை கொண்டுவர முடியும். புரட்சியில் பங்கு பற்றும் சகல வர்க்கத்தினரையும் ஒன்று திரட்டும் போது எல்லா வாக்கங்களும் எல்லா விடயங்களையும் அறிந்திருக்க வேண்டியதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக இருந்தால் போதும்.இவர்களே முதலில் ஏகாதிபத்திய விடுதலைக்காக போராட ஒன்றுபட வேண்டும். தொழிலாளர் வர்க்கமே புரட்சியினைக் கொண்டு செல்ல வேண்டும் என்று உறுதியாக கூறினார்.

     மாவோ பாட்டாளிகளின் சர்வாதிகார அரசும் பல புரட்சிகளை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக கூறுகின்றார். மாக்சிஸத்தின் படி முதலாளித்துவத்தினை வீழ்த்திப hட்டாளிகள் தங்கள் சர்வாதிகாரத்தினை நிறுவுவதற்கு மாத்திரமே புரட்சி தேவைப்படகின்றது. பாட்டாளிகள் சர்வாதிகாரம் உருவாக்கப்பட்ட பின் புரட்சிக்கான அவசியம் இல்லாமல் போய்விடுகின்றது. னோல் மாவோ பாட்டாளிகளின் சர்வாதிகாரம் நிலவும் போதும் எதிர்ப்புரட்சியாளர்களினதும், பூர்சுவாக்களினதும் மறைமுகமான எதிர்ப்பினை முறியடிப்பதற்கும் புரட்சி அவசியமானது என்றார். சீனாவில் சோஸலிச சமூகத்தில் 1965இல் ஏற்பட்ட விவசாயப் புரட்சி இதற்கு உதாரணமாகு மாவோ வாதிகளால் குறிப்பிடப்படகிறது.

 மாவோவின் புரட்சி பற்றிய கோட்பாடகிள்ல அடுத்ததாக விவாசாயிகளின் புரட்சி என்ற கோட்பாடு அமைகின்றது. அதாவது சீனா போன்ற அசிய நாடொன்றில் விவசாயிகளெ புரட்சியின் முன்னொடிகளாக இருக்க முடியுமென மாவோ குறிப்பிட்டார். கைத்தொழில் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடகளில் தொழிலாளர்கள் பெருமளவில் இருப்பதினால் மாக்ஸீம் லெனினும் தொழிலாளர்களே புரட்சியின் முன்னோடிகளாக இருப்பார்கள் என்றும், விவசாயிகள் அவர்களுட்ன இணைந்து இரப்பார்கள் என்றும் கூறினார்கள். ஆனால் மாவோ சீனா போன்ற பின்தங்கிய விவசாய நாடகளில் விவசாயிகள் பெரும்பான்மையினராக இருப்பதால் விவசாயிகளெ புரட்சியின் முன்னொடிகளாக இருப்பார்கள் என்றும் சிறு பான்மையினரான தொழிலாளர்கள் அவர்களுடன் இணைந்து இயங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இங்கு மாவோ மாக்ஸிச – லெனினிசத்தின் புரட்சிக்கொட்பாட்டிலிருந்து விலகிச் செல்வதைக் காணலாம். அதேவேளை மாக்ஸிச – லெனினிச புரட்சி கோட்பாட்டினை பின்தங்கிய நாடுகளுக்கேற்ப புனரமைக்க முற்பட்டதைக் காணலாம். இருந்த போதிலும் மாவோவின் விவசாயப் புரட்சி பற்றிய கோட்பாடு அவருடைய சுயமான சிந்தனையல்ல என்ற கருத்துக்களும் நிலவுகின்றன. 1904இல் லெனின் எழுதிய 'யுபசயசஉயn Pசழபசயஅ ழச ளுழஉயைட னுநஅழஉசயஉல' என்ற நூலிலும் ஏங்கல்ஸ் எழுதிய 'சுநளநவெ ஙரநளவழைn in குசயnஉந யனெ புநசஅயலெ' என்ற நூலஜலும் காணப்படுவதாக கூறப்படகின்றது. எனினும் மாவோதான் விவசாயிகளை ஓர் வர்க்கமாக்கி விவநசாயிகள் புரட்சி பற்றிய ஓர் கொள்கையை அறிமுகப்படுத்தி அதை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட நவீன மாக்ஸியவாதி எனப்படகின்றது.

     மாக்சியப் புரட்சி என்பது நகரங்களில் நவீன ஆயுதங்களின் துணை கொண்டு உருவாக்கப்பட்டு பின்பு கிராபமங்களுக்கு பரவ வேண்டும். ஏனெனில் தொழிலாளர்களின் வாழி;விடங்கள் பெருமளவிற்கு நகரங்களிலேயெ அமைகின்றன. ஆனால் மாவோவின் புரட்சி உபாயத்தின்படி விவசாய நாடுகளைப் பொறுத்தவரை கிராமப்புரங்களே விவசாயிகளின் வாழ்விடங்களாக அமைவதால் கிராமப் புறங்களிலேயெ முதலில் புரட்சி ஆரம்பிக்ப்பட வேண்டும் என்கின்றார். சிங்காய் குன்றுகளின் போராட்டம் (வுர்நு ளுவுசுருபுபுடுநு ஐN ஊர்ஐNபுமுயுNபு ஆழுருNவுயுஐNளு) என்ற நூலில் கிராமப்புரங்களிலிருந்தே போராட்டங்கள் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். நகரப் புரங்களில் ஏகாதிபத்திய படைகள் விரிவடைந்திருப்பதால் முதலில் கிராமப்புறங்களிலிருந்தே புரட்சி ஏற்பட வேண்டும் எனக் கூறுகின்றார். குடியேற்ற நாட்டுப் புரட்சி சக்திகள் கிராமங்களையே அடிப்படை அலகாகக் கொண்டு இருக்க வேண்டும். பின்னர் படிப்படியாக நகரங்களை நோக்கி மன்னேறிச் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.                  

சீனப் புரட்சி பற்றி விளக்கும் போது மா.சே.துங் முதலில் சீனாவின் சூழ்நிலையினை ஆராய்ந்தார். சீனச் சமூகம் காலனித்துவ, அரைகுறை மானிலத்தன்மைகளை கொண்டிருந்ததால் புரட்சியின் இலக்கு வெளிநாட்டு ஏகாதிபத்திய ஆட்சிக்கும், உள்ளுர் மானிய முறைக்குமெதிரானதாகையால் புரட்சியின் கடமைகள் இவ்விரு அடக்கியொடுக்குபவர்களையும் தாக்கியெறிவதால் சீன சமூகத்தில் காணப்படும் பல்வேறு வர்க்கங்கள் பகுதிகள் என்பவற்றில் எது மேற்சொன்னவற்றோடு போராடும் தகுதி பெற்றவை? தற்போதய கட்டத்தில் சீனப் புரட்சியின் ஊக்குவிக்கும் சக்திகள் எவை என்ற கேள்வியே முக்கியமாகும்.

     நிலச் சுவார்ந்தர் வர்க்கமோ, கொம்பிநாடோ, பூர்சுவா வர்க்கமோ புரட்சியன் உந்து சக்திகளாக இருக்க முடியாது என இரு வர்க்கங்களையும் அவர் நிக்கினார். அவர் குடியானவர், பாட்டாளிகள் முதலானவர்கள் தவிர்ந்த பூர்சுவாக்களின் செயற்பாடுகிக்க உந்து சக்திகளாக இருப்பர் எனக் கொண்டார். எல்லாத் தேவையான சூழ்நிலைகளும் பழுத்து வரும் போது சீனாவின் பூர்சுவா ஜனநாயக புரட்சியினைப் பூர்த்தியாக்குவதும் அதனையே சோசலிசப் புரட்சியாக மாற்றுவதும் இடம் பெறும். அதுவே சீன கொம்யூனிஸ் கட்சியின் பெரும் புகழ் மிக்க கடமைப்பாடும் என மா.சே.துங் குறிப்பிட்டார்.

09. புதிய ஜனநாயகம் பற்றி மாஓவின் கோட்பாடு

     மா.சே.துங்கின் புதிய ஜனநாயகத்தின் அரசியலில் ஒரு பிரதான அம்சமாக அமைவது, பல புரட்சிகர வர்க்கங்களது ஒன்றினைந்த சர்வாதிகார ஆட்சி என்பதாகும். 1939இல் மா,செ.துங் எழுதிய 'சீனப் புரட்சியும், சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியும்' என்ற நூலில் முதன் முதுதலில் இந்தப் பல்வர்க்க ஆட்சி என்ற சிந்தனையை முன்வத்தார். 1940இல் அவர் வெளியிட்ட 'புதிய ஜனநாயகம் பற்றி' என்ற நூலில் இதனை மேலும் விளக்கினார்.

     மா.சே.துங்கினுடைய எண்ணக்கருவில் மிகவும் குறிப்பிடத்தக்க இல்பு தேசிய பூர்சுவாக்களிடையே காணப்படும் புரட்சிகர பகுதியினை அதாவது முதலாளித்துவ வர்க்கத்தினரிடையேயுள்ள மிகவும் ஒத்துழைப்பு வழங்கும் பிரிவினைச் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதாகும். புரட்சிக்குப் பிந்திய அரசில் சோசலிசத்தை நோக்கிய மாற்றங்களை எதிர்பார்த்திருக்கும் கட்டத்திலும் பின்னர் இறுதி கொம்யூனிசத்தை அடைவதற்கு மன்பும் அவர்களோடு ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொண்ளாமை என்பதே.

     இவ்வாறு மா,சே.துங் இரண்டு வர்க்க சர்வாதிகாரத்துக்குரிய பதிலாகப் பல புரட்சிகர வர்க்கங்களது இணைந்த சர்வாதிகாரம் என்பதை முன்வைத்தார்.

10. ஒரு மாக்ஸிய – லெனிஸிச  புரட்சிகரவாதியாக மா.சே.துங்

     மா.சே.துங் இனுடைய தனித்துவம்ஈ அறிவு ஜீவத் தன்மை என்பன பற்றி சில கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும், மா.சே.துங் ஒரு வெற்றிகரமான புரட்சிகர தலைவர் என்பதையும், இராணுவ உபாயங்களை வகுத்தவர் என்பதையும் இருவரும் மறுப்பதில்லை. இவ்விடயத்திலும் அவர் இரு பிரதான பங்களிப்புகளைச் செய்துள்ளார். அவை,

    கொரில்லாப் போர் முறை பற்றிய மா.சே.தங்கின் பங்களிப்பு
    கிராமப் புற தளங்களை உருவாக்கி நகரங்களை சுற்றிச் சூழவேண்டுமென்ற புதிய சிந்தனை.

ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்காவிலிருந்து பல புரட்சிகர தலைவர்கள் மா.சே.துங் இன் சிந்தனைகளைக் கடன் வாங்கித்தமது நாட்டுப் புரட்சிகரப்போராட்டங்களில் பயன்படுத்தியுள்ளனர். புதிய இடதுசாரி கோட்பாட்டாளர்களான பிராகர் சிங் பனன், மாக்கூங் என்போர் தமது எழுத்துகளில் மேற்சொன்ன இரு அம்சங்களையும் வற்பறுத்தியுள்ளார்கள்.

'லின்பியெர் அவர்கள் குறிப்பிட்டதபோல்' : தோழர் மா.சே.துங்கின் மக்கள் போர் பற்றிய கோட்பாடும் கொள்கைகளும் மாக்சிச செனினிசத்தை புதிய அணி செய்திருப்பதோடு அதனை அபிவிருத்தியும் செய்துள்ளது. சின்ப புரட்சி இயல்புகளின் அனுபவங்களிலிருந்து மா.சே.துங் கிராமப்பற தள பிரதேசங்களை கட்டியெழுப்புவதன் மக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்'.

 மிகவும் பலம் வாய்ந்த (பயிற்சி – ஆயுதங்கள்) இராணுவத்தினை பலம் குறைந்த இராணுவத்டதினால் தோற்கடிக்கும் உபாயத்திலேயே கொரில்லாப் போர் முறையின் முக்கியத்துவம் தங்னகியுள்ளது. சினப்புரட்சி யுத்தத்தினை இராணுவக்கண்ணோட்டத்தில் ஆராய்ந்து பின்வரும் நான்கு பிரதான இயல்பகளை அவர் முன்வைத்தார்.

    அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் சமனற்ற வளர்ச்சி பெற்ற பரந்த நிலப்பரப்பையும் செழிப்பான சூலவளங்களையும் கொண்ட நாடு சீனாவாகும்.
    எதிரியின் பெரும் பலமே அடுத்த இயல்பாகும்.
    செம்படை சிறிதாகவும் பலவினாமாகவும் இருப்பது அடுதத இயல்பாகும்.

மேற்சொன்ன சூழ்நிலைகளுக்குப் பொருந்தத்தக்கவாறும் பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்கும் மாஓ பின்வரும் உபாய தத்துவங்களை வித்தித்தார். கொரில்லாப் போர் முறையே அடிப்படையானது. ஆனால் சாதகமான சூழ்நிலைகளில் நடமாடும் போர் முறையை நடத்தும் சந்தர்ப்பத்தினை இழக்கக் சூடும்.

   மாஓ கொரில்லாப் பேர் முறையில் அடிப்டைத் தத்துவங்களை பின்வறுமாறு விளக்கினார். எதிரி முன்னேறும் போது நாம் பின்வாங்குவோம். எதிரி முகாம் இடும் போது நாம் கரச்சல் கொடுப்போம். எதிரிகள் தாக்கும் போது நாம் தாக்குவோம். எதிரி பின்வாங்கும்போது நாம் பின்தொடர்வோம். உபாயமான உள்ளுர் எல்லைகளில் செயற்படும் இராணுவம் பல வாய்ப்பு இன்மைகளுக்குள்ளாகிறது. விசேடமாக சுற்றிவளைத்து அடக்குதல் என்பதை எதிர்நோக்கும் சீனச் செம்படை இதனை எதிர் நோக்குகிறது. என மாஓ எழுதினார். அனால் போராட்டத்திலும் போர் முனைகளிலும் நாம் இந்தச் சூழ்நிலைகளினை மாற்றுவோம். எதிரி எமக்கெதிராக நடத்ர்தும் பல பெரும் சுற்றிவளைத்து அடக்குதல் என்ற போராட்டத்தினை பல சிறிய வௌ;வேறான சுற்றி வளைத்து அடக்குதல் என்ற எதிரிக்கெதிரான எமது போராட்டங்களாக மாற்றுவோம். செம்பட்டை பொதுவாக எதிர்பாராத தாக்குதல்களையே மேற்கொள்ளும். 

   எதிர்ப்பலமாக இருந்தாலும் தொடர்ச்சியான எதிர்பாராத தாக்குதல்களினால் பலவினமாக்கப்படுவதோடு எதிர் அரைவாசி வழியில் வரும் போது அதிகமாக பின்வாங்கிவிடும். ஆனால் பின் தொடர்ந்து செல்லும்போது கொரில்லா குழுக்கள் பல எதிர்பாராத தாக்குதல்களைச் செய்யும். அதனால் எதிரி மேலும் பலவீனமடையும்.

வரலாறுகளுக்கு இரண்டு விதமான போர்களையே தெரியும். நீதியானதும், நீதியற்றதுமான போர்கள். நாம் நீதியான போர்களை ஆதரித்து நீதியற்ற போர்களை எpர்க்கின்றொம். எல்லா எதிர்ப்புரட்சி போர்களும் நீதியற்றவை. எல்லா புரட்சிப் போர்களும் நெர்மையானவை. சீனாவில் நடந்த மக்கள் போரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே 'துப்பாக்கி முனையிலிரந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது' என்ற சிந்தனையை முன்வைத்தார். கஜராமப்பற புரட்சிகர தளப்பிரதேசங்களை உருவாக்கி கிராமப் புறங்களிலிருந்து நகரங்களை சுற்றி வளைக்க வேண்டும். என்ற மாஓசே துங்கின் கோட்பாடு எல்லா அடக்கியொடுக்கப்பட்ட தேசங்களிலும் மக்களினதும் குறிப்பாக ஏகாதிபத்திய வாதத்திற்கெதிரான ஆசியா, ஆபிரிக்கா, லத்தின் அமெரிக்க நாடுகள் உள்ள ஒடக்கப்பட்ட தேசிய இனங்களது சமகால புரட்சிகரப் போராட்டங்களுக்கு சர்வ உலகுத் தன்மை வாய்ந்த, நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த முன்னணிக் கோட்பாடு ஆகும். 
 
   முடிவுரை

மேற்படி விடயங்களைத் தொகுத்து நோக்கும்போது, மா.சே.துங் புரட்சிகர போர்கள், தந்திரங்கள் என்பவை பற்றி எழுதியதோடு, நடைமுறையில் சீனாவில் புரட்சிகர போராட்டங்கள், போர்கள் என்பவற்றைத் தலைமை தாங்கி நடத்தி தான் ஒரு புரட்சிகர தலைவர் மட்டுமல்ல சிறந்த ஒழுங்கமைப்பாளரும், நடைமுறை உபாயவாதியும் என்பதை நிரூபித்தார்.


மேலும்
 மா.சே.துங் மாக்சிசத்தையும், லெனினிசத்தையும் ஒரு அரைகுறை காலனித்துவ, விவசாய, அபிவிருத்தியடையாத சீனா போன்ற நாட்டுக்கப் பிரயோகித்து வெற்றி கண்டார். சுறுக்கமாகக் கூறுவதானால் மா.சே.துங் வாதம் மாக்சிசத்தின் ஆசிய மாதிரியாகும். லெனின் வாதத்தினை ஏகாதிபத்திய யுகத்தின் மாக்சிசம் எனக் கொண்டால், மா.சே.துங் வாதம் என்பது ஏகாதிபத்தியம் முழுமையாக அழிவை நோக்கிச் செல்கின்ற காலகட்டத்து மாக்சிசம் எனவும் ஆசிய குடியானவர் சமூகங்களின் மாக்சிச லெனினிசம் எனவும் கொள்ளலாம். மாஓ சே துங்கின் கருத்துக்களானவை சீனத் தேசியவாதத்தினை அடிப்படையாக் கொண்டும், மாச்சிச கருத்துக்களை தமது நாட்டு சூழலுக்கு ஏற்றவகையில் கருத்தில் கொண்டு வெளிப்படுத்தப்பட்டவையாகவுமே காணப்படுகின்றன. எனவே சீனத் தேசியவாதத்தினதும், மாக்சிஸத்தினதும் கலப்பாகவே மாஓ சே துங்கின் சிந்தனைகள் காணப்படுகின்றன என்பதனை எற்றுக்கொள்ளலாம்.

 

No comments:

Post a Comment